தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சின்னத்திரை நடிகர்களில் ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளனர் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதியினர். சஞ்சீவ் தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாகவும், ஆல்யா மானசா இனியா தொடரில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது பிரபலத்தை பயன்படுத்தி இணையத்தில் நூதன மோசடி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதாவது ஆல்யா சில தினங்களுக்கு ஒரு பேட்டியில் ஆல்யா மானசா தொகுப்பாளர் அஸ்வத்திடம் ஒரு டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்வதை போலவும், அந்த தொகுப்பாளர் தனக்கு உடனடியாக ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துவிட்டது என்று கூறுவதை போலவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த லைவ் நிகழ்ச்சியை ஆர்பிஐ தலையிட்டு நிறுத்திவிட்டது போலவும் பரபரப்பாக தலைப்பு வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மோசடி குறித்து அறிந்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா உடனடியாக அந்த லிங்கை தங்களது ஸ்டோரியில் வைத்து இது பொய்யான மற்றும் பணமோசடி தொடர்பான செய்தி என எச்சரித்துள்ளனர்.