மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சின்னத்திரை பிரபலங்களான மைனா நந்தினி மற்றும் யோகேஷ் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது இவர்களை ஒரு கும்பல் வழிமறித்து சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் நந்தினியின் கணவர் யோகேஷ் பைக்கில் சென்றவர்களை இடிக்க சென்றதாக அவர்கள் சண்டையிட்டனர். அவர்களை பேசி சமாதானப்படுத்திய யோகேஷ் காரை எடுக்க முயன்றபோது அந்த கும்பல் மைனா நந்தினி அருகே மிரட்டுவது போல் வந்து ஹாப்பி பர்த்டே என பூ கொடுத்து வாழ்த்துகின்றனர். உண்மையில் அந்த நபர்களை தனது மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிராங்க் செய்ய சொல்லி யோகேஷ் தான் ஏற்பாடு செய்துள்ளார். இதை வீடியோவாக தனது இண்ஸ்டாவில் வெளியிட்டுள்ள மைனா நந்தினி 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? எதிர்பாராத சர்ப்ரைஸ்' என பதிவிட்டுள்ளார்.