தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
சின்னத்திரை நடிகரான வெற்றி வசந்த் 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அவர் நடித்து வரும் முத்து கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அவரது அடையாளமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு மக்களால் நேசிக்கப்படும் வெற்றி வசந்த், சக நடிகையான வைஷ்ணவியை காதலித்து வந்தார். இருவருக்கும் அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அடுத்த தீபாவளிக்கெல்லாம் தலை தீபாவளி கொண்டாட ஆயத்தமாகும் வெற்றி வசந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னால் மறக்க முடியாத தீபாவளி குறித்து கூறியுள்ளார்.
அதில், ''நான் எப்போதுமே என் அப்பாவுடன் தான் படம் பார்க்க செல்வேன். தனியாக செல்ல அப்பா அனுமதிக்க மாட்டார். அப்படியிருக்க கத்தி படம் ரிலீஸான தீபாவளி அன்று தான் முதன்முதலில் தனியாக படத்திற்கு செல்ல அப்பாவிடம் பயத்துடன் அனுமதி கேட்டேன். அப்பாவும் அப்போது அனுமதித்துவிட்டார். அதன்பிறகு பல முறை சினிமாவிற்கு தனியாக சென்றிருந்தாலும், கத்தி பட தீபாவளி தான் என்னால் மறக்க முடியாத தீபாவளி' என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் வெற்றி வசந்துக்கு தனது தந்தையின் மேல் இவ்வளவு பயபக்தியா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.