தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பம் முதலே அசத்தலாக சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் ரியா தியாகராஜன் என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். தனது எலிமினேஷன் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரியா, 'பிக்பாஸ் வீட்டுக்குள் நானும் ஏதோ ஒன்று செய்தேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் நீங்கள் என்னை சப்போர்ட் செய்யவில்லை. இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னை போன்ற ஆட்கள் முன்னேறக்கூடாதா? எனக்கெல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?' என்று வேதனையுடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். மேலும் பிரபலமாக இல்லாததால் தான் தனக்கு யாரும் ஓட்டு போடவில்லை என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.