நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தெய்வமகள் சீரியலை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இந்த தொடரில் அண்ணியார் கேரக்டருடன் பயணிக்கும் துணை வில்லி கதாபாத்திரம் தான் வினோதினி. வினோதினி கதாபாத்திரத்தின் காமெடி கலந்த வில்லத்தனம் பலரையும் ரசிக்க வைத்தது. இந்த வினோதினி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சுஹாசினி. தெய்வமகள் காலக்கட்டத்தில் பல சீரியல்களில் பிசியாக நடித்து வந்த சுஹாசினியை தற்போது வரும் சீரியல்களில் பார்க்க முடிவதில்லை. மேலும் ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான சீதா தனது அக்கா தான் என்று கூறியிருக்கிறார். சீதா, வினோதினிக்கு பெரியப்பா மகளாம். தமிழ் திரையுலகில் சீதா உச்சநட்சத்திரமாக இருந்த போதிலும் சினிமா வாய்ப்பிற்காக வினோதினி சீதாவின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தியது கிடையாது என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.