தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரை நடிகர்களான ஸ்ரீயும், சஞ்சீவும் நல்ல நண்பர்கள். இருவரும் சில சீரியல்களில் இணைந்தும் நடித்துள்ளனர். நடிகர் ஸ்ரீ அவ்வப்போது எதையாவது பேசி சில சர்ச்சைகளில் மாட்டி வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் சஞ்சீவ் குறித்து பேசிய விஷயம் இருவருக்குமிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியிருகிறது.
நடிகர் விஜய்யின் பள்ளித் தோழரான சஞ்சீவ் பல இடங்களில் விஜய்யை இமிட்டேட் செய்வது போலவே நடந்து கொள்வார். சில பேட்டிகளிலும் விஜய் தனது நண்பன் என்பதால் அவர் குறித்து பல தகவல்களை உரிமையுடன் சொல்வார். இதனால், பலரும் அவர் விஜய்யை காப்பி அடிப்பதாகவும், விஜய்யின் பெயரை பயன்படுத்திக் கொள்வதாகவும் சொல்லி வந்தார்கள். இதனையொட்டி பேட்டியில் சஞ்சீவ் பற்றிய பேசிய ஸ்ரீயும், நான் பலமுறை சஞ்சீவிடம் இதை சொல்லிவிட்டேன். ஆனால் அவன் கேட்கவில்லை என்று கூறியிருந்தார்.
ஸ்ரீயின் இந்த பேட்டி வைரலானதால் சஞ்சீவ் சோஷியல் மீடியாக்களில் மேலும் ட்ரோல் செய்யப்பட்டார். இதனால் இருவருக்குமிடையே மனம் வருத்தம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில், ஸ்ரீ அண்மையில் அளித்துள்ள பேட்டியில், ''நடிக்க வரும் முன்பே நானும் சஞ்சீவும் நல்ல நண்பர்கள். நண்பர்களிடம் எதையும் நேரடியாக சொல்ல வேண்டும், ஆனால், அன்று பேட்டியின் போது ஒரு வேகத்தில் சஞ்சீவ் பற்றி பேசிவிட்டேன். எனவே, அவனிடம் போன் செய்து மன்னிப்பு கேட்டேன். அவனும் பரவாயில்லை என்று சொன்னான். ஆனால், எதுவாக இருந்தாலும் நான் முகத்துக்கு நேராக பேசியிருக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.