தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட சின்னத்திரையில் முக்கியமான நடிகை ஆஷா ஜோஸ். கன்னட தொலைக்காட்சிகளில் வெளியான பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானவர். கடந்த 2016ம் ஆண்டு நடந்த 'மிஸ் இந்தியா பிளானட் அழகி' போட்டியிலும் ஆஷா கலந்து கொண்டார்.
தற்போது ஆஷா, ஆபாச படங்களை காட்டி ஒரு பெண்ணிடம் இரண்டு கோடி கேட்டு மிரட்டியதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு திலக்நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆஷாவுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தோழிகளாக பழகி வந்தனர். இதற்கிடையே, அந்த பெண் தான் வேலை செய்து வரும் நிறுவனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்கியதும் ஆஷாவிடம் இருந்து விலகத் தொடங்கினார்.
இதனால் கோபம் அடைந்த ஆஷா அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்து, அவருடைய ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை தனது செல்போனுக்கு பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் தனக்கு பணப்பிரச்னை இருப்பதாகவும், உங்களது கணவரிடம் இருந்து பணம் வாங்கி கொடுங்கள் என்றும் அந்தப் பெண்ணிடம் ஆஷா கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுத்து விட்டார்.
இதையடுத்து, தன்னிடம் இருக்கும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க 2 கோடி கொடுக்க வேண்டும் என்றும் ஆஷா அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திலக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆஷா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.