மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்றான ஈரமான ரோஜா தொடரின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் போது தன்னுடன் நடித்து மறைந்த வெங்கட் என்ற சக நடிகருக்காக மற்றொரு நடிகரான ஸ்யாம் கதறி அழும் காட்சி புரோமோவாக வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள "ஈரமான ரோஜாவே" தொடர் 3 வருடங்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் விஜய் டிவி சார்பில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
புரோமோவில், ஈராமான ரோஜாவே தொடரில் நடித்து அண்மையில் மறைந்த நடிகர் வெங்கட் அவர்களை நினைவு கூர்ந்து, சீரியல் குழுவினர் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். அந்நேரத்தில் உணர்ச்சி வசப்படும் ஸ்யாம் வெங்கட்டுக்காக கதறி அழுகிறார். அப்போது பேசும் அவர், " அவரிடம் (வெங்கட்) ஒரு முறை கோபப்பட்டு விட்டேன். அரை மணி நேரத்தில் எனக்கு மெசேஜ் பண்ணி, சாரிடா! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு சொன்னாரு. யார்ட்டையாச்சும் ஏதாவது பேசணும்னா உடனே பேசிடுங்க. நான் நிறைய இழந்துட்டேன்" என உணர்ச்சி பொங்க பேசுகிறார். அப்போது அருகிலிருக்கும் திரவியம் அவரை தேற்றுகிறார்.
மறைந்த நடிகர் வெங்கட் சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.