தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சீரியல் நடிகை சஹானா காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதல் பற்றி வெளியுலகிற்கு அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சின்னத்திரை பிரபலமான சஹானா ஷெட்டி, தற்போது சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தனது காதலர் யார் என்ற ரகசியத்தை தற்போது உடைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சஹானா இவர் தான் எனது காதலர் அபிஷேக் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து சஹானாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சஹானா தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.