மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள படம் பதான் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாடல் காட்சி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக ஆடியிருந்தது வைரலாக பரவியது. அதோடு காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா படுகோன் நடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இதனால் பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
காவி நிறம், துறவு, தியாகம், அறிவு, தூய்மை மற்றும் சேவை ஆகியவற்றின் சின்னமாகும். அதனை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென வி.எச்.பி. தலைவர் டாக்டர் பிராச்சி சாத்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபூரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் சுகுமார் என்பவர் படத்தை தயாரித்த ஆதித்ய சோப்ரா, நடித்த ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலில் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ஆபாசத்தை பரப்பியதாவும் அவர் குற்றம்சாட்டி உள்ளர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட முசாபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விசாரணை வருகிற ஜனவரி 3ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.