துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் பெயரில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உத்தரப் பிரதேச மாநில போலீசாரிடம் சிக்கி இருக்கிறார்கள் .
ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்தது மட்டுமின்றி நொய்டாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் கேன்சர் நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து என கூறி ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் 11 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரித்ததில் ஒருவர் கானா நாட்டை சேர்ந்தவர் மற்றும் இருவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து சிம் கார்டு, லேப்டாப் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மேலும் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி கும்பல் இவை தவிர போலியான மேட்ரிமோனி வெப்சைட், டேட்டிங் வெப்சைட் என மேலும் பல போலியான வெப்சைட்கள் மூலம் மோசடி செய்து வருவது தெரிய வந்துள்ளது .