தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் தீபிகா படுகோனே | அனுஷ்கா போஸ்டரால் ஏற்பட்ட விபத்துகள் : இயக்குனர் ஓபன் டாக் | சினிமா தயாரிப்பிலும் இறங்கும் நடிகர்கள் பட்டியலில் இணைந்த ரவிமோகன் | விமானப்படை அதிகாரி தோற்றத்தில் தனுஷ் | பிளாஷ்பேக்: விஷம் அருந்தி வெள்ளித்திரை வாய்ப்பினைப் பெற்ற ஜே பி சந்திரபாபு | கமல்ஹாசன் சொத்து ரூ.305 கோடி, கடன் ரூ.49 கோடி |
தமிழிலிருந்து ஹிந்திக்கும் பல படங்கள் காலம் காலமாக ரீமேக்காகி வருகிறது. சமீப காலமாக ஹிந்தியில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பெரும் மசாலா படங்களாக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.
'கைதி' படத்தை ஹிந்தியில் 'போலா' என ரீமேக் செய்து பத்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். 'கைதி' படத்தில் இருந்த அந்த தரத்தை தவிடுபொடியாக்கி வெறும் கமர்ஷியல் படமாக மட்டுமே ஹிந்தியில் கொடுத்திருந்தார்கள். பெரும் வசூலைப் பெற முடியாமல் அந்தப் படம் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் அஜித், தமன்னா நடித்து 2014ல் வெளிவந்த 'வீரம்' படத்தை ஹிந்தியில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்க 'கிசி கா பாய் கிசி கி ஜான்' என ரீமேக் செய்து வருகிறார்கள். அதன் டிரைலரை நேற்று வெளியிட்டார்கள்.
டிரைலரின் முதல் பாதியில் சல்மான், பூஜா இடையிலான காதல் காட்சிகளும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மட்டுமே இடம் பெறும் விதத்திலும் டிரைலர் உள்ளது. கடந்த 16 மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது. ஹிந்தியிலும் அதிரடி மசாலாப் படமாகவே எடுத்திருக்கிறார்கள் என்பதை டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. ஏப்ரல் 21ம் தேதி இப்படம் வெளியாகிறது.