தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஷாரூக்கான் நடிப்பில் ஏற்கனவே இந்த வருடத்தில் பதான், ஜவான் இரண்டு படங்கள் ஏழு மாத இடைவெளியில் வெளியாகி இரண்டுமே வெற்றிப்படங்களாக அமைந்து ஆயிரம் கோடி வசூல் இலக்கை எட்டின. இதைத்தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் தான் நடித்து வரும் டன்கி படத்தையும் ரிலீஸ் செய்து ஆயிரம் கோடி வசூலில் ஹாட்ரிக் சாதனை படைக்க நினைக்கிறார் ஷாரூக்கான். மேலும் பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இந்த படத்தை இயக்கியிருப்பதால் வெற்றியை சொல்லி அடிக்கலாம் என முடிவு செய்து பட ரிலீஸ் வேலைகளை செய்து வருகிறார்களாம் டன்கி படக்குழுவினர்.
அதேசமயம் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படமும் அதே தேதியில் தான் வெளியாக இருக்கிறது. இரண்டுமே பான் இந்தியா படங்கள் என்பதால் இந்த படங்களின் மோதல் தற்போது அனைவராலும் கவனித்து பார்க்கப்படுகிறது. இரண்டும் ஒரே நேரத்தில் வெளியானால் ஏதோ ஒன்றின் வெற்றி பாதிக்கப்படும் அல்லது படங்கள் நன்றாக இருந்தாலும் இரண்டு படங்களின் வசூலும் பிரிந்து போவதற்கு வாய்ப்பு உண்டு என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் சலார் படத்தில் வரதராஜ மன்னர் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் இப்படி இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது குறித்து கூறும்போது, “இன்னும் சலார் படத்தின் புரமோஷன் திட்டங்கள் பற்றி எனக்கு முழுதாக தெரியவில்லை.. நவம்பரில் படம் வெளியாகிறது என்பது மட்டுமே தெரியும். தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீலுடன் தொடர்பில் தான் இருந்து வருகிறேன். ஆனால் ராஜ்குமார் ஹிரானி, ஷாரூக்கான் கூட்டணியில் உருவாகும் படத்துடன் எங்கள் படம் வெளியாகிறது என்பதை ஒரு திரைப்பட காதலனாக ரொம்பவே விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.




