கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில் கடந்த பிப்ரவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் தீபிகா. தற்போது இருவரும் தங்களது குழந்தையின் வருகையை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமண புகைப்படங்களை திடீரென்று நீக்கியுள்ளார். இதனால் பாலிவுட் மீடியாக்களில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் பிரியப் போவதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியானது .
அதையடுத்து ரன்வீர் சிங் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்து திருமண புகைப்படங்களை நீக்கவில்லை. அதை ஆர்கேவ் செய்து வைத்திருக்கிறேன் என்று உடனடியாக ஒரு தகவல் வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மேலும் தற்போது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் சிங்கம் அகைன் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.