பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி | தேனீ வாயில் புகுந்ததால் கரிஷ்மா முன்னாள் கணவர் மரணம்? | ஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கி | புலவர் பெருந்தலை சாத்தனாராக நடித்த கொட்டாச்சி | விஜயகாந்த் மகனுக்கு விஜய், லாரன்ஸ் உதவினார்களா? | ஒரே நேரத்தில் 5 படங்களா? : சிம்பு விளக்கம் அளிப்பாரா | இன்று ஸ்ரீலீலாவுக்கு பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து |
இந்தியில் ரியாலிட்டி ஷோவான கோன் பனேகா குரோர்பதியின் 12வது சீசனை முடித்துள்ள அமிதாப் பச்சனுக்கு, தற்போது புதிய பொறுப்பு ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து தேடிவந்துள்ளது. உத்தரகாண்ட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, 'சொர்க்கத்தில் நூறு நாட்கள்' (100 days in heaven) என்கிற ரியாலிட்டி ஷோவை நடத்த முடிவு செய்துள்ளது உத்தரகாண்ட் அரசு. இதற்கான ஒப்புதலை நேற்று உத்தரகாண்ட் முதல்வர் வெளியிட்டுள்ளார். இதற்காக 12.81 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளார்.
இந்த ஷோவை தொகுத்து வழங்கும் பொறுப்பு அமிதாப் பச்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குஜராத் சுற்றுலா வளர்ச்சிக்கு அமிதாப் என்ன விதமாக உதவி செய்தாரோ, அதே வழிமுறையை பின்பற்றியே இந்த ஷோவும் நடைபெற உள்ளது. இந்த ஷோவின் 7௦ சதவீதம் உத்தரகான்ட்டின் சிறப்பு வாய்ந்த இடங்களில் படமாக்கப்படுகின்றன.. சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா வருமானத்தை அதிகரிக்கவும், உத்த்ரகான்ட்டின் வியாபார எல்லையை விரிவிபடுத்தவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டுமிட்டுள்ளது உத்தரகாண்ட் அரசு.