வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தனுஷ் அறிமுகமான ‛துள்ளுவதோ இளமை' படத்தில் அவருடன் சமமான ரோலில் நடித்தவர் அபினய். அதன்பின் சில படங்களில் நடித்தார். பின்னர், பல ஆண்டுகள் காணாமல் போனார். சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நலக் குறைவால் அவதிப்படுகிற, மருத்துவ சிகிச்சை எடுக்கிற போட்டோ வைரல் ஆனது. இது அபினய் தானா என்று கேட்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இருந்தது.
கல்லீரல் பிரச்னையால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அவருக்கு கேபிஓய் பாலா ஒரு லட்சம் கொடுத்து உதவினார். நண்பர்கள் சிலரும் உதவி உள்ளனர். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறதாம். இதற்கு 30 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. ஆனால் அவர் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார். இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளாராம்.