கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். காதல் மன்னனாக அண்டாஸ் (1949), முரட்டு அடியாளாக ஆன் (1952), நாடக பாணி படமான தேவதாஸ் (1955), நகைச்சுவை நாயகனாக ஆஜாத் (1955), சரித்திரக் காதலனாக முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக படமான கங்கா ஜமுனா (1961) என திலீப் குமார் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.
1970களில் புதிய நடிகர்களின் வரவால் அவருக்கு சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டது. எனவே அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக் கொண்டார். 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து குணச்சித்திர பாத்திரங்களில் ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) உள்ளிட்ட படங்களில் வயது முதிர்ந்த குடும்ப தலைவர், போலீஸ் அதிகாரி என தொடர்ந்து நடித்து வெற்றிகளை குவித்தார்.