ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
1994ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் பாரஸ்ட் கம்ப். உலகம் முழுக்க பிரபலமான இந்த படம் பல விருதுகளை அள்ளியதோடு வசூலிலும் சாதனை படைத்தது. உலகின் சிறந்த 10 படங்களின் வரிசையிலும் இடம் பெற்றது.
இந்த படம் லால் சிங் சட்டா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஆமீர்கான் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
இந்த படத்தில் இரண்டாவது உலகப்போர் காட்சிகள் இடம் பெறுகிறது. அந்த காட்சிகளில் லால் சிங் சட்டாவின் நண்பனாக சக போர் வீரனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். காட்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அது முடியாமல் போகவே தற்போது லடாக் பகுதியில் படமாக்குகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு நடக்காததால் விஜய் சேதுபதி உரிய தேதிகள் இல்லாமல் படத்திலிருந்து விலகி விட்டார்.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் விஜய் சேதுபதி நடித்திருக்க வேண்டிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நாக சைதன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நாக சைதன்யாவும், ஆமீர் கானும் இந்திய ராணுவ வீரர்கள் சீருடையில் இருக்கின்றனர். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.