5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
க்ரீதி சனோன், பங்கஜ் த்ரிபாதி நடிப்பில், லக்ஷ்மண் உடேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் காமெடி படம் மிமி. நெட்பிளிக்ஸும், ஜியோ சினிமாஸும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை வருகிற 30ம் தேதி வெளியிட இருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று இந்தப் படம் சில இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானது. நவீன தொழில்நுட்ப வசதியை கொண்ட நெட்பிளிக்சிற்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாக நேற்றே படத்தை வெளியிட்டுவிட்டது.
இது குறித்து நெட்பிளிக்சின் தொழில்நுட்ப பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த படம் எப்படி இணையத்தில் கசிந்தது என்பதை கண்டுபிடித்தே தீருவது என்ற முனைப்பில் இருக்கிறது நெட்பிளிக்ஸ்.