5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் குருப். எண்பதுகளில் கேரளாவில் பிரசித்தி பெற்ற குற்றவாளியான சுகுமார குருப் என்பவனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக சாக்கோ என்கிற இன்னொரு இளைஞரை கொன்று, தான் இறந்து விட்டது போன்று சித்தரித்து தப்பிச் சென்றுவிட்டான் குருப். தற்போதும் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் தான் குருப் இருக்கிறான். படத்திலும் அதையே தான் காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் கேரள முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் ஜேக்கப் என்பவர் குருப் குறித்து ஒரு ஆச்சரிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது சாக்கோ கொலையான அந்த சமயத்திலேயே குருப் மீது சந்தேகம் வந்து போலீசார் அவரை பிடித்து விட்டனராம். ஆனால் அதற்குள் குருப் தன்னுடைய தாடியை எடுத்துவிட்டு புதிதாக மச்சம் ஒன்றை ஒட்டிக்கொண்டு ஆளே மாறி காட்சியளித்துள்ளான். அவனிடமிருந்து கைரேகை பதிவும் எடுக்கப்பட்டது.
ஆனால் அதுகுறித்த ரிசல்ட் வருவதற்கு சில தினங்கள் ஆகும் என்பதால் குருப் உள்ளிட்ட ஒருசில சந்தேகப்பட்ட நபர்களை போலீசார் அனுப்பி வைத்துவிட்டனர். ஆனால் குருப்பின் கைரேகை தான் என்பது தெரியவரும்போது குருப் கேரளாவை விட்டு எஸ்கேப் ஆகி இருந்தான். அதன் பிறகு அவன் போலீசாரிடம் சிக்கவேயில்லை என்று கூறியுள்ளார் அந்த டிஜிபி.