போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

அருவி படம் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த நடிகை அதிதி பாலன் மலையாளத்தில் படவேட்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். லிஜு கிருஷ்ணா என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். துல்கர் சல்மானுடன் செகண்ட் ஷோ படத்தில் இணைந்து அறிமுகமான நடிகர் சன்னி என்பவர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இந்தநிலையில் இந்த படத்தின் இயக்குனர் லிஜு கிருஷ்ணா மீது படக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த எதிர்பாராத நடவடிக்கையால் ஸ்தம்பித்து போன படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்கிற முனைப்பில் வேலைகளை கவனித்து வந்த தயாரிப்பாளர் சன்னி வெய்ன், இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என திரையுலகில் உள்ள முக்கியஸ்தர்களிடம் பேசி வருகிறாராம்.