தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் மாறிமாறி பிசியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.. அதேசமயம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஜெயராம் நடித்த மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்த அவர், அதையடுத்து மலையாளத்தில் தனது இரண்டாவது படமாக 19(1)(a) என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்து வி.எஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தமிழ்நாட்டை சேர்ந்த அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தப்படத்தின் டைட்டிலுக்கேற்றபடி கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் தான் ரிலீசுக்கான பணிகள் துவங்கப்பட்டன. இந்தநிலையில் இந்தப்படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் நேரடியாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.