மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு அடுத்ததாக இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் டைரக்சனில் நடிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக இயக்கும் படத்திலும் மகேஷ்பாபு தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் விளம்பரம் ஒன்றிற்காக மகேஷ்பாபு நீச்சல் குளம் ஒன்றில் வெற்றுடம்புடன் நீராடுவது போன்று ஒரு புகைப்படத்தை அவரது மனைவி நம்ரதா சிரோத்கர் வெளியிட்டு இருந்தார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஷ்பாபு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு வெகு நாட்களாக நீச்சல் தெரியாது என்றும் கொரோனா தாக்கம் காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடந்த சமயத்தில் தான், நீச்சல் கற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முன்னணி ஹீரோ, ஆக்சன் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருபவர், நீச்சல் கற்றுக்கொள்ளாமலேயே இவ்வளவு நாள் கடந்து வந்து விட்டார் என்றால் அது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். இந்த தகவலை இப்போது தெரிந்து கொண்ட ரசிகர்கள், மகேஷ்பாபு நடித்த படங்களில் ஆற்றில், ஏரியில், கடலில் குதிப்பது, நீந்துவது போன்ற காட்சிகள் இருக்கிறதா என்பதை நினைவுபடுத்தி பார்த்துக் கொள்ளுங்கள்.