திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் நாக சவுர்யா. தமிழில் இயக்குனர் விஜய் இயக்கிய தியா படத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இவரது 24 படமாக எஸ்எஸ் அருணாசலம் என்பவர் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தநிலையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார் நாக சவுர்யா. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்து அளிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் வெளியான தகவல்களில் இருந்து நாக சவுர்யா இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வடிவமைப்புக்கு மாற்றும் விதமாக கடுமையான பயிற்சிகள் செய்து வருகிறார் என்றும் அதற்காக தண்ணீர் இல்லாத டயட் உணவுகளை அவர் உட்கொண்டு வந்ததால் ஏற்பட்ட நீர் இழப்பு காரணமாக அவருக்கு இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இன்னும் இரண்டு தினங்களில் (நவம்பர் 20ஆம் தேதி) இவரது திருமணம் பெங்களூரில் நடைபெற இருக்கிறது என்பதுதான்.. புதுமாப்பிள்ளை இப்படி டயட் என்கிற பெயரில் உடலை வருத்திக் கொள்ளலாமா என பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.