மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் மோகன்லால், தனது நீண்டநாள் கனவான டைரக்சன் ஆசையையும் நிறைவேற்றும் விதமாக தற்போது பரோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. வரலாற்று பின்னணியில் 3-டி யில் உருவாகியுள்ள இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்து விட்டாலும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒவ்வொன்றும் கவனமுடன் மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த நேர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மோகன்லால் முதன்முறையாக தானே இயக்கி இருக்கும் பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு உற்சாகத்தில் இருக்கின்றனர்.