தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லாலுக்கு அடுத்தபடியாக இருப்பவர் நடிகர் திலீப். கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்தாலும் இவரது திரையுலக பயணம் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் இவரும் தமன்னாவும் இணைந்து நடித்த பாந்த்ரா என்கிற படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானாலும் ஓரளவு தான் அந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்ததாக தங்கமணி என்கிற படத்தில் நடித்து வருகிறார் திலீப். ஒரு கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து உண்மை கதையாக இந்த படம் தயாராகி வருகிறது.
இப்படி சமீபகாலமாக சீரியஸான படங்களில் நடித்து வந்த திலீப் மீண்டும் தனது வழக்கமான காமெடி பாணிக்கு திரும்பியுள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு பவி கேர்டேக்கர் என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது திலீப்பின் 149வது படம் ஆகும். முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை, நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வினீத் குமார் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த ஆயாள் நானல்ல என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.