ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் பந்த்லா கணேஷ். ஜூனியர் என்டிஆர் நடித்த டெம்பர், பாட்ஷா, பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங் என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்துள்ளார். ஒரு நடிகராகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது இவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெட்டி வெங்கடேஸ்வரா என்பவரிடம் தான் வாங்கிய 95 லட்சம் ரூபாய் தொகைக்காக காசோலை ஒன்றை வழங்கியுள்ளார் பந்த்லா கணேஷ். ஆனால் அவரது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பந்த்லா கணேஷ் மீது நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த வழக்கில் பந்த்லா கணேஷுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் இது குறித்து அப்பீல் செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.