தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்த படமாக உருவாகியுள்ளது தேவரா. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயீப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து ஹைதராபாத், சென்னை என சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது தேவரா படக்குழு. இந்த நிலையில் தேவரா படத்தின் தயாரிப்பாளர், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் கொரட்டாலா சிவா ஆகியோருடன் துல்கர் சல்மான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், “புதிய ஆரம்பம் செப்டம்பர் 27ல் துவங்க இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தேவரா படக்குழுவினருடன் துல்கர் சல்மான் கைகோர்த்துள்ளது எதற்காக என தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கேரளாவில் நடைபெறும் இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அவரை அழைப்பதற்காகவோ அல்லது துல்கர் சல்மான் தனது வே பாரர் நிறுவனம் மூலம் தேவரா படத்தை கேரளாவில் வெளியிடவோ இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.