சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் நடிகர் மோகன்லால் தற்போது தனது 47வது வருட திரையுலக பயணத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட 360 படங்களில் நடித்து முடித்துவிட்ட மோகன்லால் தற்போதும் வருடத்திற்கு ஐந்து படம் நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக இருந்து வருகிறார். அதே சமயம் தனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்த டைரக்ஷன் ஆசைக்கு உருவம் கொடுக்கும் விதமாக தற்போது 'பரோஸ்' என்கிற பேண்டஸி வரலாற்று படத்தை இயக்கியுள்ளார் மோகன்லால். வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து சென்ற காலகட்டத்திற்கு பிறகு நடக்கும் கதையாக இது உருவாகியுள்ளது.
குறிப்பாக 3டியில் உருவாகியுள்ள இந்த படம் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளை கவர்ந்த மை டியர் குட்டிச்சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதையையும் எழுதியுள்ளார். வரும் டிசம்பர் 25ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை வெவ்வேறு கட்டங்களில் நடத்தி வருகிறார் மோகன்லால்.
அதன் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் பங்குபெறும் விதமாக 'பரோஸும் ஆயிரம் குழந்தைகளும்' என்கிற ஆன்லைன் ஓவிய போட்டியை அறிவித்திருந்தார் மோகன்லால். இதில் ஆறு குழந்தைகள் வெற்றிப்பெற்றதாக தேர்வு செய்யப்பட்டனர். கொச்சியில் இதை ஒரு விழாவாகவே நடத்திய மோகன்லால் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு தன் கையால் பரிசு கொடுத்தார். அது மட்டுமல்ல தான் இயக்கும் முதல் படம் குழந்தைகளை மையப்படுத்திய படமாக, குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் விதமாகத்தான் இருக்க வேண்டும் என எப்போதோ முடிவு செய்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.