தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் இந்தப் படத்தின் கதை என்னுடையது தான் என்று சிலர் குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி வருவது சமீப வருடங்களாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் சில குற்றச்சாட்டுகள் நிரூபணமும் ஆகி உள்ளன. பெரும்பாலனவை நிரூபிக்கப்படாமலேயே போனதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் தருண்மூர்த்தி இயக்கத்தில் வெளியான தொடரும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் உதவி இயக்குனர் ஏபி நந்தகுமார் என்பவர் இந்த படத்தின் கதை, தான் 20 வருடங்களுக்கு முன்பே எழுதிய ராமன் என்கிற கதையை தழுவி அப்படியே எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தொடரும் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய ராமன் கதையில் இருக்கும் பல சம்பவங்கள் அப்படியே அதிலும் இடம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி அடைந்த ஏபி நந்தகுமார் கேரளாவில் உள்ள மூலம்துருத்தி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “பல வருடங்களுக்கே கதையை நான் எழுதி விட்டேன். 2021ல் அதை ஒரு பிடிஎப் டாக்குமெண்ட் ஆகவும் நான் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். இந்த கதையை நடிகர்கள் பாலா மற்றும் நகைச்சுவை நடிகர் ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரிடம் அவர்களது கருத்துக்களை கேட்பதற்கு கூறியுள்ளேன். அது மட்டுமல்ல கதையின் பிரின்ட் காப்பி ஒன்றை நடிகர் பாலாவிடமும் கொடுத்திருந்தேன்” என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் உதவி இயக்குனர் ஏ.பி நந்தகுமார்.