சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாளத்தில் பிரபல இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பும் இவரும் ஒரே காலத்தில் சினிமாவில் நுழைந்ததுடன் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களும் கூட. இயக்குனர் நாதிர்ஷா, 'கட்டப்பனையில் ஹிருத்திக் ரோஷன், அமர் அக்பர் ஆண்டனி' உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் திலீப்பை வைத்து 'கேசு இ வீட்டின்டே நாதன்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று தனது செல்லப்பிராணியான நோபில் என்கிற பூனையை குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு விலங்குகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் நாதிர்ஷா.
அப்போது அங்கிருந்த பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பூனைக்கு அதன் சீற்றத்தை தணிக்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் ஒரு கயிறு கட்டியதுடன் சிறிதளவு மயக்க மருந்தையும் கொடுத்திருக்கின்றனர். அந்த சமயத்தில் பூனை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியான நாதிர்ஷா இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் நாதிர்ஷா.
இந்த புகாரில் தனது செல்லப் பூனைக்கு கழுத்தில் கட்டப்பட்ட கயிறு காரணமாக மரணம் சம்பவித்ததா அல்லது அதிக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அது உயிரிழந்ததா? இது குறித்து பிரேத பரிசோதனை செய்து உண்மையை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார் நாதிர்ஷா.