தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மோகன்லால் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு அவரது 360வது படமாக வெளியான ‛தொடரும்' மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படத்திலும் கூட அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இது தவிர மலையாளத்தில் உருவாகி வரும் ஹிருதயபூர்வம், தெலுங்கில் விருஷபா, அதன் பிறகு திரிஷ்யம்-3 ஆகிய படங்கள் அவரது நடிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்த நிலையில் தனது 365வது படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மோகன்லால். அறிமுக இயக்குனர் ஆஸ்டின் டான் தாமஸ் இயக்குகிறார். இவர் கடந்த 2020ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‛அஞ்சாம் பாதிரா' படத்தில் முதன்மை துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். நீண்ட நாட்கள் கழித்து மோகன்லால் ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் நடிப்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது
மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற இஷ்க் மற்றும் ஆலப்புழா ஜிம்கானா ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் ரத்தீஷ் ரவி இந்த படத்திற்கு கதை எழுதுகிறார். பிரபலமான ஆசிக் உஸ்மான் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.. இந்தப்படம் குறித்து வெளியான போஸ்டரில் கக்கி உடை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தப்படத்தில் மோகன்லால் போலீஸ் அதிகாரியாக நடிக்கலாம் என்றும் தெரிகிறது.