‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக வருவாயை ஈட்டித் தரும் தெலுங்குத் திரையுலகத்தில் திரைப்பட ஊழியர்கள் ஸ்டிரைக் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி கடந்த வாரம் முதல் எந்த படப்பிடிப்புக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தெலுங்கு திரைப்பட ஊழியர் சம்மேளனம் அறிவித்து ஸ்டிரைக்கை ஆரம்பித்தது.
கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு கூட போராட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான திரைப்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர்கள் தரப்பில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது குறிப்பிட்ட சதவீத உயர்வு, அடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு மீதி சதவீத உயர்வு என 30 சதவீத உயர்வை பிரித்துத் தருவதாகப் பேசியுள்ளார்கள். ஆனால், அதை ஊழியர்கள் தரப்பில் ஏற்கவில்லை என்கிறார்கள்.
நடிகர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் கொட்டித் தரும் தயாரிப்பாளர்கள் ஊழியர்களுக்கு சில நூறு ரூபாய் உயர்த்தித் தர மறுக்கிறார்கள் என ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். ஸ்டிரைக் இன்னும் நீடிக்கும் பட்சத்தில் அது அடுத்து வெளிவர உள்ள படங்களின் வெளியீட்டை பாதிக்கும் நிலை உருவாகும்.