திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் | விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேசுக்கு வெற்றியை கொடுக்குமா ‛ரெளடி ஜனார்தனா' | அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம் | சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி | தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி அறிவிப்பு | 2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள் | நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் |

மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'விருஷபா'. மலையாளம் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிப் படமாக உருவாகியுள்ள விருஷபா வரும் டிசம்பர் 25ம் தேதி பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கன்னட இயக்குனர் கவுரி நந்தா இயக்கியுள்ளார். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த படத்தை இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நடிகர் மோகன்லால் பேசும்போது, “கன்னட டைரக்டர் ஒருவர் மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை இயக்குவதும் அதை வடநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதும் என இதன் வித்தியாசமான கூட்டணியே இந்தப் படத்தின் சிறப்பம்சமாக என்னை கவர்ந்தது. அது மட்டுமல்ல இந்த படத்தின் கதையை கவுரி நந்தா என்னிடம் சொன்னபோது நிச்சயமாக இது வித்தியாசமான படமாக இருக்கப் போகிறது எனக்கு தெரிந்தது. இரண்டு வித காலகட்டங்களில் இந்த படம் நடக்கும் விதமாக உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.