வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மலையாள சினிமாவின் ஆக்சன் பட இயக்குனர்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படங்களை இயக்கிவந்த இவர், கடந்த சில வருடங்களாக இறங்கு முகத்தில் இருக்கிறார். இந்தநிலையில் இவரது பல வெற்றிப்படங்களில் நடித்த சுரேஷ்கோபி, இவரை கைதூக்கி விடும் விதமாக நட்புக்கரம் நீட்டியுள்ளார். அந்தவகையில் பாப்பன் என்கிற படம் இவர்களது கூட்டணியில் தற்போது உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை கனிகா இணைந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன் இதே ஜோஷி டைரக்சனில், 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்கிற படத்தில் சுரேஷ்கோபிக்கு ஜோடியாக கனிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 'பாப்பன்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜோஷியுடனும் சுரேஷ்கோபியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனிகா, “மீண்டும் என் குடும்பத்தில் இணைந்தது போல உள்ளது” என கூறியுள்ளார்.