அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது |
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பணமாக நிதி உதவி செய்வதுடன் ஒரு சிலர் மருத்துவ உதவிகளையும் நேரடியாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நடிகர் மோகன்லால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி திட்டத்தை தற்போது துவங்கியுள்ளார்.
மோகன்லால் தனது பெற்றோர் பெயரில் விஸ்வசாந்தி என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கேரளாவில் பலவிதமான உதவிகளை செய்து வருகிறார். இதன்மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரண வசதிகள் கூடுதலாக செய்து தரப்பட்டுள்ளன.
மோகன்லால் கூறும்போது, “கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 200 படுக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய 10 ஐசியூ படுக்கைகள் மற்றும் போர்ட்டபிள் எக்ஸ்-ரே மிசின் என மூன்று அடுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது” என கூறியுள்ளார்..