பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

ஒரு பக்கம் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகிகொண்டு இருக்க, இன்னொரு பக்கம் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா மருத்துவ உபகரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நிகில் சித்தார்த்தாவும், பாலிவுட் நடிகர் சோனு சூட் பாணியில், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் மருத்துவ உதவி கேட்பவர்களுக்கு, கடந்த சில நாட்களாகவே, தேடிச்சென்று உதவிகளை செய்து வருகிறார்.
ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர், இ-பாஸ் பெறவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகில் சித்தார்த், ஐதராபாத்தில் இதுபோன்ற மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக சென்றுகொண்டிருந்தபோது, அவரிடம் இ-பாஸ் இல்லாததால் வாகன சோதனையின்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மருத்துவ உதவிகள் செய்து வருவதாகவும், தற்போது நோயாளி ஒருவருக்காக மருந்துகளை கொண்டு சென்று கொண்டிருப்பதாக கூறியும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லையாம்.
இதுகுறித்து நிகில் சித்தார்த்தா கூறும்போது, “அத்தியாவசிய மருத்துவ உதவிகளுக்காக பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என்று தான் நினைத்திருந்தேன். அதுமட்டுமல்ல, இ-பாஸ் பெற கிட்டத்தட்ட பத்து முறைக்கு மேல் விண்ணப்பித்தும் சர்வர் பிரச்சனையால் கிடைக்கவில்லை. மருத்துவ அவசர உதவிகளை இ-பாஸ் இன்றி உடனே அனுமதிக்க வேண்டும்” என வருத்ததுடன் கூறியுள்ளார்.