துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
லூசிபர் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்டார் மலையாள நடிகர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற பெயரில் தனது இரண்டாவது படத்தையும் இயக்கி வருகிறார் பிரித்விராஜ். கதாநாயகிகளாக மீனா, கனிகா ஆகியோர் நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் ஹைதராபத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
அங்கே தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நடைபெற்றது. அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி படப்பிடிப்பு முடிந்து கிளம்புவதற்கு முன்னதாக பிரித்விராஜின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். உடன் அவரது மனைவி ஆர்த்தியும் சென்றுள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகை கனிகாவும் இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.