5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மலையாளத்தில் வெளிவந்து பெரிய வெற்றியையும், பாராட்டுகளையும் பெற்ற படம் நயாட்டு. ஜோஜு ஜார்ஜ், குஞ்சாகோ போபன், நிமிஷா சஜயன் நடித்திருந்தார்கள். மார்ட்டின் ப்ராக்கட் இயக்கி இருந்தார். சாஜி காலித் ஒளிப்பதிவு செய்திருந்தார், விஷ்ணு விஜய் இசை அமைத்திருந்தார்.
ஒரு ஜாதி சங்க தலைவர் போலீஸ் சென்ற வாகனத்தில் மோதி இறந்து விடுவார். தேர்தல் நடக்க இருக்கும் நேரம் என்பதால் ஜாதியை திருப்தி படுத்துவதற்காக அரசியல்வாதிகள் போலீஸ் அதிகாரி ஜோஜு ஜார்ஜ், புதிய சப் இன்ஸ்பெக்டர் குஞ்சாகோ போபன், கான்ஸ்டபிள் நிமிஷா ஆகியோரை குற்றவாளியாக்குவார்கள். போலீசுக்கு பயந்து போலீசே தலைமறைவாகி ஓடுகிற மாதிரியான கதை. இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது.
தற்போது இதன் தெலுங்கு ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பலசா, ஸ்ரீதேவி சோடா செண்டர் படங்களை இயக்கிய கருணா குமார் இயக்குகிறார். ராம் ரமேஷ், சத்யதேவ், அஞ்சலி நடிக்கிறார்கள். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.