நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.. விக்ரம் படங்கள் பெரும்பாலும் நீண்டகால தயாரிப்பில் இருப்பது ஏதேச்சையாக அமைந்துவிட்ட ஒன்றுதானோ என்பது போல இந்தப்படமும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த சந்தோஷத்தை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் விக்ரம்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், மிருனாளினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கனிகா, பத்மபிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் மலையாள நடிகர்களான ரோஷன் மேத்யூ, சர்ஜுனோ காலித், வில்லன் நடிகர் பாபுராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இதில் இளம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.