ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கொரோனா அலை தாக்கத்திற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக பல படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகி வருகின்றன. தமிழைப் பொறுத்தவரையில் கடந்த 2021ம் வருடம் ஓடிடி, டிவி, இணையதளம் என 42 படங்களும் அதற்கு முந்தைய வருடம் 2020ல் 24 படங்களும் வெளியாகி இருந்தன.
தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் வரவேற்பு என்பது அதன் வசூலை வைத்து கணக்கிட முடியும். ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டன என்பது குறித்து அந்நிறுவனங்கள் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடுவதில்லை. மொத்தமாக பலத்த வரவேற்பு என்று சொல்வதுடன் முடித்துக் கொள்கிறார்கள்.
திரைப்படங்கள், ஓடிடி வெளியீடுகள் ஆகியவற்றைப் பற்றி பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி செய்யும் தனியார் நிறுவனமான ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் 2021ல் ஓடிடியில் இந்திய அளவில் நேரடியாக வெளியான படங்களின் வரவேற்பு பற்றி டாப் 10 பட்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா, லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன் நடித்த 'ஜெய் பீம்' படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அஜித் நடித்த 'பில்லா, ஆரம்பம்,' படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கிய ஹிந்திப் படமான 'ஷெர்ஷா' முதலிடத்தைப் பிடித்துள்ளது. தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலிகான் நடித்த 'அத்ராங்கி ரே' 10வது இடத்தைப் பிடித்துள்ளது. மலையாளப் படமான டொவினோ தாமஸ் நடித்த 'மின்னல் முரளி' 6ம் இடத்தைப் பிடித்துள்ளது.