செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தனுஷ் -- ஐஸ்வர்யா இடையே மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த, நடிகர் ரஜினி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்குமான, 18 ஆண்டு கால திருமண உறவு திடீரென விரிசலை சந்தித்தது. இருவருக்கும் யாத்ரா, லிங்கா என, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிவதாக ஒன்றாக அறிவித்தனர். இது, ரஜினி உள்ளிட்ட குடும்பத்தினர் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
'இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இன்னும் விவாகரத்து பெறவில்லை. அதனால், இருவரும் சேர வாய்ப்புள்ளது' என, தகவல் வெளியான நிலையில், தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில், ரஜினி இறங்கினார். முதலில் ஐஸ்வர்யாவிடம் பேசிய ரஜினி, 'உன் பிள்ளைகள் எதிர்காலத்தை விட, உன் விருப்பம் முக்கியமாகி விட்டதா?' என காட்டமாக கேட்டுள்ளார். ரஜினியின் கடுமையான கண்டிப்புக்கும் அறிவுரைக்கும் பின், சில நிபந்தனைகளுடன் தனுஷுடன் சேர்ந்து வாழ முன்வந்தார் ஐஸ்வர்யா. ஆனால், தனுஷ் தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனுஷ் தந்தை கஸ்துாரிராஜாவிடமும், தனுஷிடமும் பேசி, சமாதான நடவடிக்கைகளை, ரஜினி தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரியாமல் தடுக்க, பேரன்கள் வாயிலாகவும் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி. பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயம் காரணமாக, மகளையும், மருமகனையும் சமாதானப்படுத்த, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் ரஜினி. அதற்கு விரைவில் பலன் கிடைக்கும் என்கிறது, அவரது குடும்ப வட்டாரம்.