'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 60வது படமான வலிமை கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்தபோது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. என்றாலும் அந்த காயங்களை பொருட்படுத்தாமல் உடனடியாக அஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சண்டைக் காட்சியில் நடித்தபோது அஜித்தின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு பெண் மருத்துவர் ஒருவர் மருந்து போட்டுவிடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.