துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகைகள் குஷ்பு, ரோஜா ஆகிய இருவரும் 1990 - 2000 ஆண்டுகளில் சினிமாவில் பிசியாக நடித்து வந்தவர்கள். அதோடு வீரம் வெளஞ்ச மண்ணு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருக்கும் நடிகை ரோஜா, நகரி தொகுதியில் தொடர்ந்து எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தபோதே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. தற்போது ஆந்திர மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்த ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக நியமித்த அமைச்சர்களில் ரோஜாவையும் ஒரு அமைச்சராக்கி இருக்கிறார். இதையடுத்து ரோஜாவுக்கு திரையுலகத்தில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. நடிகை குஷ்பூ ‛‛ஆந்திரப்பிரதேச அமைச்சராக பதவியேற்ற ரோஜா செல்வமணிக்கு வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.