தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
காக்கா முட்டை, கனா, கணவர் பெ.ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், கால் டாக்ஸி டிரைவராக நடித்திருக்கும் படம் டிரைவர் ஜமுனா. வத்திக்குச்சி படத்தை இயக்கிய பா. கின்ஸ்லி இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா ராயுடன் ஆடுகளம், நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இயக்குனர் கின்ஸ்லி கூறியதாவது: இன்றைய சூழலில் ஏராளமான பெண்களும் கால் டாக்ஸி டிரைவர்களாக பணியாற்றுகிறார்கள். பெண் டிரைவரின் ஒருநாள், ஒரு டிரிப்பை மையப்படுத்தியதுதான் டிரைவர் ஜமுனாவின் கதை. இந்த கேரக்டரில் நடிப்பதற்காக வாடகை காரை இயக்கும் பெண் ஓட்டுனர்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து உடல் மொழியையும், வாடிக்கையாளர்களின் மனநிலையையும் கேட்டறிந்த பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
பொதுவாக சாலை பயணம் பற்றிய திரைப்படம் என்றால் ப்ளூமேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தை உருவாக்குவார்கள். ஆனால் இந்தப்படத்தை நிஜமான சாலைகளில் படமாக்கினேம். ஐஸ்வர்யா ராஜேஷ் டூப் போடாமல், அவரே வாகனத்தை வேகமாக இயக்கிக்கொண்டே, தனக்கான கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
சாலையைக் கவனித்துக் கொண்டு உடன் நடிக்கும் நடிகர்களின் உரையாடலுக்கும் பதிலளித்துக் கொண்டே அவர் நடித்தது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. இது சவாலான வேடம் என்பதை உணர்ந்து, முழுமையான ஒத்துழைப்பை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்தார். என்றார்.