இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
அருள்நிதி நடித்து முடித்துள்ள படம் டி பிளாக். இதில் அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார். விஜய்குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அருள்நிதி கூறியதாவது: இந்த படம் 2008 காலகட்டத்தில் நடப்பது மாதிரியான கதை. ஒரு கல்லூரிக்குள் நடக்கும் அமானுஷ்யமான பிரச்சினைகளுக்கு மாணவர்கள் இணைந்து தீர்வு காண்பது மாதிரியான கதை.
இந்த கதையை கேட்டவுடன் கல்லூரி மாணவனாக நடிக்க பயந்தேன். என்றாலும் 10 கிலோ வரை எடை குறைத்து, தாடியை அகற்றி கண்ணாடி முன் நின்று என்னை நானே கல்லூரி மாணவனாக உணரத் தொடங்கியதும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து என்னிடம் அறிமுக இயக்குனர்கள் தான் கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் பெரும்பாலும் த்ரில்லர் ஜார்னரில் இருக்கிறது. அதனால் அந்த மாதிரியான படங்கள் அதிகமாக வருகிறது.
பான் இந்தியா படங்களில் நடிப்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை. அதற்கான தகுதி இப்போது எனக்கு இல்லை என்று கருதுகிறேன். தமிழ் படங்களில் நடித்து இங்கு சாதிக்க வேண்டியதே நிறைய இருக்கிறது. என்றார்.