தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'காமன்மேன்'. சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை 'கழுகு' பட இயக்குனர் சத்யசிவா இயக்குகிறார். ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் டைட்டிலுக்கு பிரச்சினை வந்தது. வேறொரு நிறுவனம் இந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்தது. இதனால் தலைப்பு எங்களுக்கே சொந்தம் என்று அந்த நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது. இதை தொடர்ந்து படத்தின் தலைப்பை இப்போது, நான் மிருகமாய் மாற என்று மாற்றி உள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை : படம் துவங்கப்பட்டபோதே 'காமன்மேன்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இதே டைட்டிலை வேறு ஒரு நிறுவனம் தங்களது படத்திற்கு முன்கூட்டியே பதிந்துவிட்ட தகவல் பின்னர்தான் தெரிய வந்தது. இதனால் இந்தக்கதைக்கு பொருத்தமாக இருந்தாலும் காமன்மேன் என்கிற டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. இதனால் படத்திற்கு 'நான் மிருகமாய் மாற' என புதிய டைட்டிலை வைத்துள்ளோம். இதுவும் கதைக்கு பொருத்தமான டைட்டில்தான். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.