துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கும் பாலிவுட் படம் ஜவான். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பை, புனே, டில்லி உள்ளிட்ட இடங்களில் வந்தது.
இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கி தொடர்ச்சியாக சென்னையில் நடந்தது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து ஷாருக்கான் மும்பை திரும்பி விட்டார்.
இது குறித்து இயக்குனர் அட்லீ கூறுகையில், ‛‛சென்னையில் ஷாருக்கான் ஒரு மாதம் தங்கியிருந்தது, ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றது என எதையும் நம்ப முடியாத உண்மையாக உள்ளது. இதற்காக ஷாருக்கானுக்கு நன்றி சொல்கிறேன். இத்தனை நாள் அவர் இங்கு படப்பிடிப்பில் பங்கேற்றதால் 1000 சினிமா தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கிறது. இதற்காகவும் ஷாருக்கிற்கு நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.