மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
சினிமாவில் புரொடக்ஷன் மானேஜராக இருந்த உல்லாஷ் சங்கர் '1982 அன்பரசின் காதல்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். அதோடு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தும் இருக்கிறார். அவருடன் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ் சிவப்பிரகாசம் நடித்துள்ளனர். ஜிஸ்பின் செபாஸ்டியன் ஒளிப்பதிவையும், எஸ். சிந்தாமணி இசையையும் கவனிக்கிறார்கள்.
இயக்குனர் உல்லாஷ் சங்கர் படத்தைப் பற்றி கூறியதாவது : கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர்.
மனம் தளராத அன்பரசு காதலி இருக்கும் கேரளாவிற்கு சென்று அவளிடம் காதலை கூற முற்படுதையில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா ? என்பதை கதைக்களமாக்கி இந்த படம் உருவாகி உள்ளது. என்றார்.