தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
அமெரிக்க டிவி நிகழ்ச்சியான 'அமெரிக்காஸ் காட் டேலன்ட்' சீசன் 20 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். தற்போதைய சீசனில் இந்திய நடனக் குழுவான “பி யுனிக் க்ரூ' என்ற குழுவினர் கலந்து கொண்டனர். உடலை வளைத்து, நெளித்து அவர்கள் ஆடிய நடனம், ரசிகர்களையும், நிகழ்ச்சியின் நடுவர்களையும் ஆச்சரியப்படவும், அதிர்ச்சியடையவும் வைத்தது. அவர்கள் நடனமாடிய பாடல் ஒன்றாக இருக்க, யாரோ ஒரு ரசிகர் அதில் 'புஷ்பா' படப் பாடலை சேர்த்து சமூக வலைத்தளத்தில் பரவ வைத்துள்ளார்.
அதை 'புஷ்பா' பட எக்ஸ் தள கணக்கில், 'புஷ்பா' பாடலுக்குத்தான் அவர்கள் நடனமாடினார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்தாமல், 'புஷ்பா' பாடல் என்றே குறிப்பிட்டு, 'உலகளாவிய நிகழ்வு' எனப் பெருமையாகப் பகிர்ந்திருந்தார்கள். அல்லு அர்ஜுனும் அதை உண்மை என்று நினைத்து, 'வாவ் மைண்ட் ப்ளோயிங்' என கமெண்ட் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
ஆனால், ரசிகர்கள் 'புஷ்பா' பாடலுக்கு அந்த நடனக்குழுவினர் நடனமாடவில்லை. அவர்கள் நடனமாடிய பாடல் வேறு பாடல் என ஒரிஜனல் வீடியோவை எடுத்து பகிர்ந்துள்ளனர். இருந்தாலும் அல்லு அர்ஜுன், புஷ்பா எக்ஸ் தள கணக்கு ஆகியவை தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை.
'பி யுனிக் க்ரூ' புஷ்பா பாடலுக்கு நடனமாடவில்லை என்றாலும் அவர்கள் நடனமாடியது உண்மையிலேயே மிரள வைத்துள்ளது.